இறந்தவர்களின் உடலை வெள்ளநீரில் சுடுகாட்டிற்கு சுமந்து செல்லும் கிராம மக்கள்! பாலம் அமைத்துத்தர அரசுக்கு கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள கே.துரைசாமிபுரம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அக்கிராமத்திற்கான சுடுகாடு அமைந்துள்ளது.
இந்நிலையில் மழை காலங்களில் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதால், கிராமத்தில் மழைக்காலத்தில் யாரேனும் மரணம் அடைந்தால் அவர்களின் உடலை சுடுகாட்டுக்கு தூக்கி செல்வ கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சுடுகாட்டுக்கு போகும் வழியில் அரை கிலோ மீட்டர் அளவில் முட்டு அளவிற்குமேல் தண்ணீர் பாய்ந்து ஓடுவதாகவும், இதனால் வாகனத்திலோ நடந்தோ இறந்தவரின் உடலை தூக்கிச் செல்ல முடியாமல் நாங்கள் பிணத்துடன் சில நேரம் தத்தளிக்க வேண்டியதுள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு உடனடியாக அந்த பகுதியில் உயர்மட்ட பாலமோ அல்லது தரைப் பாலமோ அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.