இறந்த சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி.

ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க சார்பில் இன்று (11~6~22) தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமையில் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் முன்னிலையில் இறந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒரத்தநாடு தாலுக்கா பாச்சூர் வெங்கடாசலம் மனைவி ராஜகுமாரி அவர்களிடம் விவசாய சங்க தலைவர் சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ரூபாய் 10,000க்கான காசோலையை வழங்குகிறார்.இதுவரை சங்க சார்பில் 1101 குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ 1கோடியே 8 லட்சத்து 40ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தலைவர் பா.பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜி. கிருஷ்ணன் முன்னாள் வருவாய்த் துறை ஊழியர் சங்க தலைவர் ந. பாலசுப்ரமணியன் மற்றும் இளைஞர் மன்ற தலைவர்கள் ஆர் கே செல்வகுமார் கோ.சக்திவேல் விவாசாய சங்கத் தலைவர்கள் சீனி முருகையன் வி. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
