இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பயில மாணவர்கள் தேர்வு.

தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டாய உரிமைச்சட்டத்தின்படி கல்வி பயில்வதற்கு அரசாணை வெளியிட்டு அதன்படி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் போடியில் உள்ள சிசம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பயில மாணவர்கள் தேர்வு இன்று நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ராஜமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் உமாகிருஷ்ணா , வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சிசம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வேதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி
