BREAKING NEWS

இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி.

இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 7ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

 

தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல்திறன் மேன்மை அடையச் செய்யும் எண்ணத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கடந்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளி சார்ந்த அந்தந்த பகுதிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு வேலை தேடுபவர்களில் தன்னார்வலர்களை தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

 

மானாமதுரை வட்டார வள மையத்தில் தொடக்க நிலையில் 165 மற்றும் உயர் தொடக்க நிலையில்134 என மொத்தம் 299 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏழாம் கட்ட பயிற்சி நடைபெற்றது இதற்கான கற்றல் உபகரணங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.

 

இதில் அட்டைகள், போஸ்டர் பயிற்சி புத்தகம் ஆகியவை தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முருகன் அவர்கள் வரவேற்றார்கள். வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு மற்றும் மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

 

ஆசிரியர் பயிற்றுனர் கலா மற்றும் ராமையா ஆகியோர் திட்ட கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். ஆசிரியர் கருத்தாளர்களாக சுடலை, வீரய்யா முனியாண்டி ,சிவராஜ் ஆறுமுகம்,மூர்த்தி,ராஜ்* ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள். இறுதியாக நன்றி கூறி பயிற்சி நிறைவடைந்தது.

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS