இளையான்குடியில் நூலகம் எம்எல்ஏ ஆ.தமிழரசி இரவிக்குமார் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி 1-வார்டு மற்றும் 2-வார்டு உறுப்பினர்களின் அலுவலகத்தையும், நூலகத்தையும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் அவர்களும், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் நஜமுதீன் அவர்களும், துணைத் தலைவர் இப்ராஹிம் அவர்களும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரமுகர் இப்ராஹிம் ஷா அவர்கள்,
இளையான்குடி செயல் அலுவலர் அவர்களும், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன் அவர்கள், வார்டு உறுப்பினர்களும், கழகம் முன்னோடிகளும், இஸ்லாமிய சகோதர,சகோதரிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை