இஸ்லாமியருக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி புல்டோசர் கொண்டு கட்டடங்களை இடித்த அதிமுக பிரமுகர்.
இஸ்லாமியருக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி புல்டோசர் கொண்டு கட்டடங்களை இடித்த அதிமுக பிரமுகர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, வேலாயுதங்குடி கிராமத்தில் வக்ஃப் வாரியம் சார்பில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மேம்பாட்டுக்காகவும்
கடந்த 1975ஆம் ஆண்டு சுமார் 7ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தை சீர்படுத்தி தரை வாடகைக்கு விடுவதற்கான பணிகளை இஸ்லாமிய கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அறிந்த திருச்சி மாவட்டம் குழுமணி அடுத்துள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தனபால் என்பவர் திடீரென அந்த இடத்தை ஆக்கிரமித்து கற்களை நாட்டினார். இதுகுறித்து திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த இடத்தில் வைத்த கற்களை அகற்றி சென்றுவிட்டார்.
அந்த இடத்தில் இஸ்லாமிய கழகத்தின் சார்பில் சிறிய கட்டடம் கட்டப்பட்டது. திடீரென எட்டரை கோப்பை சேர்ந்த அதிமுக பிரமுகர் தனபால் இன்று திடீரென பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வந்து அந்த கட்டிடத்தை தரைமட்டமாக்கி அங்கு நடப்பட்டிருந்த கற்களை அகற்றி விட்டார்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த இஸ்லாமிய கழகத்தின் நிர்வாகிகள் அங்கு சென்று நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கட்டடங்களை இடிக்க பயன்படுத்திய பொக்லைனை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக இஸ்லாமிய நல்வாழ கழகத்தின் பொதுச் செயலாளர் ஷாஜகான் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்
தொடர்ந்து எட்டரை கோப்பை பகுதியை சேர்ந்தவர் தனபால் ஏற்கனவே அந்த இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றார். இதுகுறித்து ஏற்கனவே நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.
தொடர்ந்து இன்று மீண்டும் அத்துமீறி பொக்லைன் இயந்திரத்தை கொண்டு கட்டடங்களை தரைமட்டமாக்கி உள்ளார். இது தொடர்பாக இன்று
நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.