ஈபிஎஸ் பதவியில் வைத்திலிங்கம்..மனோஜ் பாண்டியனுக்கு புதிய பொறுப்பு: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி!

‘அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்படுவார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செயல்படுவார்கள்’ என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைத்திலிங்கம் விடுவிக்கப்படுகிறார். மேலும் அவர் கழக இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்