ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்களே உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளதை தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து ஒத்துழைப்பை வழங்குவதாக கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுகலந்தாய்வு, உட்பிரிவு பட்டா மாறுதல் குறித்து விவாதிக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் உட்பிரிவு பட்ட மாறுதலில் இதுவரை 7இலட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நில அளவை துறையால் முடிக்கப்படாமால் நிலவையில் உள்ளது.

இதனால் அரசு கிராம நிர்வாக அலுவலர்களே உட்பிரிவு பட்டா மாறுதலை செய்ய
தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களே உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்று அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பணியை விரைந்து முடித்து அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கி பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சதிஷ்கமல் மாவட்ட பொருளாளர் தமிழரசன், மற்றும் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, நம்பியூர், சத்தி, தாளவாடி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதியிலிருந்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்ட பொருப்பாளர்கள் கருத்துரை வழங்கினார்.
பொது கலந்தாய்வில் 3ஆண்டுகள் ஆ வகை கிராமத்தில் அ வகையில் ஒருவருடம் பணி முடித்தவர்களுக்கு 01-07-2022க்குள் வேறு கிராமங்களுக்கு கலந்தாய்வு மூலம் செல்லவது குறித்து விவாதிக்கப்பட்டது.
