ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிபிஐ நகர செயலாளர் ப.மா.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. காய்கனி மார்க்கெட் துவங்கி திருவள்ளுவர் நகர் வரை மக்களை சந்தித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.

இதில், சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. சந்திரசேகர், நகர மன்ற துணை தலைவர் சி.மணி, சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், விசிக தொகுதி செயலாளர் ஆற்றலரசு, சிபிஐ நகர துணை செயலாளர்கள் எம்.ஆர். சுரேஷ்குமார், எ.சண்முகசுந்தரம், நகர பொருளாளர் என்.விஸ்வநாதன், Aiyf நிர்வாகிகள் எஸ்.தாமோதரன், உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
