ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சி 3-வது மண்டல கூட்டம் ஆசிரியர் காலனியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் சண்முக வடிவு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது பாதாள சாக்கடையில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறுகிறது. இது சரி செய்யப்பட வேண்டும்.
மாநகராட்சியில் பயன்படுத்தப்படாமல் உள்ள வாகனங்களை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஊராட்சி கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகளை அனைத்து வீடுகளுக்கும் முறையாக கொடுத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.https://youtu.be/tGIl8pDcZ8M