ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது.
வழக்கம்போல் இன்று பத்து மணி அளவில் பர்னிச்சர் கடையை திறந்த போது உள்ளே கிடந்த டீசல் பாக்கெட்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் அவரது கடையினுள் சுமார் 200 மில்லி லிட்டர் அளவுள்ள டீசல் பாக்கெட்டுகளை கடையினுள் வீசி உள்ளனர்.
மேலும் ஜன்னல் வழியாக அந்த பாக்கெட்டுகளுக்கு தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..
அதிர்ஷ்டவசமாக பாதி எரிந்த நிலையில் தீ பரவாமல் அனைந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமை போலீசார் நிகழ்விடத்தில் சோதனை நடத்தி வருகின்றநர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சம்பவ பகுதியில் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.