உச்சம் தொட்ட பருத்தி விலை!!
உச்சம் தொட்ட பருத்தி விலை!!
தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றன. பெட்ரோல் , டீசல், தங்கம் தொடங்கி சமையல் எண்ணெய், தீப்பெட்டி வரை அனைத்தும் கடும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஏலம் நடைபெற்றது.
அதன்படி, ஆர்.சி.எச்.பருத்தி ராகம் குவிண்டாலுக்கு ரூ.10399 முதல் ரூ.13950 வரை விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சமீபத்தில் ஆர்.சி.எச்.பருத்தி ராகம் ஒரு குவிண்டால் ரூ.12900க்கும்,கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.13100 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குவிண்டாலுக்கு ரூ.13,950 ஆக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது.
அதைப்போல,டி.சி.எச் ரகம் ரூ.9,569 முதல் ரூ.12,949 வரையிலும்,கொட்டு ரக பருத்தி ரூ.6,098 முதல் ரூ.8,400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.இதனால்,நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.1 கோடி அளவில் பருத்தி மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.