BREAKING NEWS

உடல் முழுவதும் சேறுபூசி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா.!

உடல் முழுவதும் சேறுபூசி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும்  ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா.!

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா தாண்டி குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா 21 ஆம் ஆண்டு விழாவானது இன்று காலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவின் முதல் நாளான இன்று,..

 

அதிகாலையில் தாண்டி குடி கிராமத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் உடல் முழுவதும் சேறுபூசி மேளதாளத்துடன் நகர் பகுதியில் முக்கிய வீதிகளில் ஆடிப்பாடி வலம் வந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை நிறைவு செய்தனர் இந்த சேத்தாண்டி வேடம் போடும் விழாஐதீகம் பல நூறு ஆண்டுகளாக தொடர்கிறது.

 

 

இது பற்றி இக்கிராமத்தைச் சேர்ந்த கணபதி ராஜா வயது 45 என்பவர் கூறுகையில் உடம்பு முழுவதும் சேறு பூசுவது (சேத்தாண்டி வேடம்)அறிவியல் பூர்வமாக தோல் நோய்கள் பூச்சி கடிகள் எதுவும் வராமல் பாதுகாக்கும் இது அறிவியலும் ஆன்மீகமும் சம்பந்தப்பட்டது என்றார்.

 

இவ்விழாவில் தாண்டிக்குடியை சுற்றியுள்ள பண்ணைக்காடு பூலத்தூர்,மங்களம் கொம்பு கானல் காடு மற்றும் அரசன் கொடை கிராமத்தைச் சேர்ந்த குடி பெயர்தாரர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு சேத்தாண்டி வேஷம் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )