உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுத்தல் திருகல்யாண நிகழ்ச்சி என மிக சிறப்பாக நடைபெற்றது.
வரும் நிலையில் இன்று ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன், விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் ஆடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கலந்துகொண்டனர்.
மேலும் வருடம் தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய படி நோய் நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.