உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மறையூர் காவல்துறையினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கொழுமம் பகுதியில் வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்து கேரளா மாநிலம் மறையூர் வங்கி மற்றும் கடைகளில் கடந்த மாதம் மாற்ற முயன்றபோது சிக்கிய திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த அழகர் என்பவரை மறையூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்பு அவரிடம் விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலில் உடுமலைப்பேட்டை அடுத்த கொழுமம் பகுதியில் வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சிட்ட பிரபுவை குமரலிங்கம் காவல்துறை உதவியுடன் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய பிரின்டிங் மிஷின் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மறையூர் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
பின்பு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல இடங்களில் கள்ள நோட்டுகளைபுழக்கத்தில் விட்டுள்ளனர் எனத் தெரியவந்தது. மேலும் ஏற்கெனவே 5 பேரை கைது செய்து சிறையில் உள்ள நிலையில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டதும், இந்த கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவித்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட அழகர். மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மற்றொரு குற்றவாளியான ஹிக்கம் என்பவரை தேடி தேனி மாவட்டம் விரைந்துள்ளனர்.
மறையூர் காவல் துறையினர் இதனால் உடுமலைப்பேட்டை. கொழுமம் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்களிடையேபெரும் பரபரப்பு நிலவியது.