உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலார்களால் இரு குடும்பத்தினர் அடிதடி..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலர்கள் இரு குடும்பத்தினர் அடிதடி ரகளை மகளிர் காவல்துறையினர் விசாரணை இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.
உடுமலைப்பேட்டை அடுத்த போரப்பட்டி தனபால் என்பவர் கூலி தொழிலாளி மகள் ஜனனி 20:இவரும் இளங்கோ நகர் திருப்பூர் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் ஜெய சந்தோஷ் என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று ஜெய சந்தோஷுடன் ஜனனி வீட்டை விட்டு வெளியே வந்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் அப்பொழுதே காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி புகார் இணைத்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு இருவரின் பெற்றோர்களும்உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று விசாரித்து அவர்களை தேடி நீதிமன்றத்தின் அருகில் வைத்து இருவரையும் அடித்துள்ளனர்.
அப்பொழுது இரு குடும்பத்தினரும் நடுரோட்டில் அடித்துக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் உடுமலைப்பேட்டை குற்றவியல் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து காதலர்கள் இருவரையும் அழைத்துச் சென்று மீண்டும் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது அங்கு வந்த இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில்இருந்துஜனனியின் பெற்றோர் தனது மகள் வேண்டாம் என அந்தப் பையனுடனே சொல்லட்டும் எனக்கூறி விட்டு சென்று விட்டனர்.
அதன் பின் ஜெய சந்தோஷம் மற்றும்அவரது பெற்றோர்களிடம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜனனியை ஒப்படைத்துஎழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
