உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக முன்னோர்கள் அறிவுரையின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலகெருது ஆடுதல், நோன்பு கூட்டம் போடுதல், தேவராட்டம் ஆடுதல், கும்மியாட்டம் ஆடுதல் ஆடிப்பெருக்கென்று பொது தூரி அமைத்து விழா கொண்டாடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தை,..
தற்பொழுது ஜெயராஜ் என்ற தனிநபர் மேற்கண்ட இடம் என்னுடையது இப்பகுதியில் எதுவும் நடைபெறக்கூடாது என போலி ஆவணம் தயாரித்து கம்பிவேலி அமைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்பு வருவாய் கோட்டாட்சியர் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடுக்கம்பாளையம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சலக் கெருதுடன் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இப் பிரச்சனை குறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறியதின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.