உடுமலையில் கால்நடைகளுக்கு தீவனமாக வேலிமசால் சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

உடுமலை பகுதியில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது அதன் உப தொழிலாக கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர். கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது இந்த செலவை பெருமளவு தவிர்ப்பதற்கு வேலிமசால் சாகுபடி கை கொடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை தற்போது உள்ளது இதனால் பசுக்கள் மூலம் பால் உற்பத்தி ஆடு மாடு கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பலவும் காணாமல் போய்விட்டன அவை பல்வேறு மாற்று பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டதால் கால்நடைகளின்தீவனத்திற்காக பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் கால்நடைகளின் தீவனத் தேவைக்கு விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர் இதனையடுத்து யானை புல் குதிரைமசால் நேப்பியர் புல் வேலிமசால் உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிரிட தொடங்கி தொடங்கியுள்ளனர். இதில் வேலிமசால் சாகுபடி விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுப்பதாக உள்ளது விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படும் வேலிமசால் அதிக பராமரிப்பு இல்லாமல் வளரக் கூடிய தீவனப் பயிராகவும் உள்ளது.
இதனை பயிரியிட்டு சுமார் 80 நாட்களில் அறுவடை செய்ய தொடங்கலாம் அதன் பிறகு மீண்டும் சுமார் 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் வரட்சியை தாங்கி வளரக்கூடிய வேலி மசால் பயிரில் பூச்சி நோய்கள் தாக்குதல்கள் ஏற்படுவதில்லை மேலும் வறட்சியால் காய்ந்த விட்டாலும் மீண்டும் மழை பெய்யும்போது துளிர்த்து வளரும் தன்மை கொண்டது.

ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 50 டன் வரை மகசூல் தரக்கூடியது இது ஒரு பல்லாண்டு தாவரம் என்பதால் ஒரு பகுதியிலிருந்து கால்நடைகளுக்கு தேவையான அளவு அறுவடை செய்யும்போது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தீவனத்தை பெறமுடியும் வேலிமசால் இலைகள் சிறியதாக இருப்பதால் கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
மேலும் அதிக அளவில் பொருள் சேர்த்துக் கொண்ட வேலிமசால் கால்நடைகளுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது தினசரி 5 கிலோ வரையிலும் ஆடுகளுக்கு தினசரி 2 கிலோ வரையிலும் வேலிமசால் தீவனமாக வழங்கலாம்.
கால்நடைகளின் தேவைக்கேற்ப வேலிமசால் சாகுபடி செய்து இருந்தால் அவற்றில் ஒரு பகுதி கவிதைகளுக்காக விட்டுவிடலாம் விதை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் கூடுதலாக வருவாய் ஈட்ட முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
