உடுமலையில் நான்கு வயது சிறுவன் சாதனை.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச்சேர்ந்த நான்கு வயது சிறுவன், கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.உடுமலை, சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்பால்- -கவுதமி தம்பதிகளின் மகன் விதுஷன். நான்கு வயது சிறுவனான விண்வெளி, கோள்கள் மற்றும் ராக்கெட் குறித்த 50 கேள்விகளுக்குக் குறைந்த நேரத்தில் பதிலளித்து, கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதற்காக, சென்னையில் நடந்த உலக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழாவில், இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, ‘EXTRAORDINARY GRASPING POWER GENIUS KID’ என்ற சான்றிதழும் பெற்று அசத்தியுள்ளார்.தவிர, 60 தமிழ் வருடங்கள், எட்டுத்தொகை நுால்கள், பத்துப்பாட்டு நுால்கள், ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை சரளமாக கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.
அவரது பெற்றோர் கூறுகையில், ‘தற்போது, வாரத்தின் நாட்கள், மாதங்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், கணித வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் விலங்குகளின் பெயர்கள் அனைத்துமே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அத்துபடி. குறிப்பாக, 3 வயதில், 60 தமிழ் வருடங்களை 1 நிமிடம் 6 விநாடிகளில் கூறி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்’ என்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.