BREAKING NEWS

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது’குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டக் கூடிய பயிர்களில் கொத்தமல்லித்தழைக்கும் இடம் உண்டு.இதனை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.ஆனால் கோடை வெப்பம் மல்லித்தழை மகசூலை பாதிக்கும்.அதேநேரத்தில் கூடுதலாக தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் இழப்பைக் குறைக்க முடியும்.அதேநேரத்தில் சரியான பருவத்தில் சாகுபடி செய்யும் போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து காணப்படும்.

இதனால் பருவத்தில் கிலோ ரூ 8 க்கு விற்றால் கோடையில் ரூ 80 க்கு விற்கிறது.அதாவது 10 மடங்கு விலை விற்கும் சூழலில் ஏக்கருக்கு 1000 கிலோ வரை மகசூல் குறைவு என்பது பெரிய பாதிப்பை உண்டாக்காது.சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும் என்பதால் நல்ல லாபம் தரும் சாகுபடிப் பயிராகவே மல்லித்தழை உள்ளது.மேலும் காய்கறி சாகுபடியில் ஆட்கள் பற்றாக்குறை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.ஆனால் மல்லித்தழையைப் பொறுத்தவரை வியாபாரிகள் அவர்களே நமது தோட்டத்துக்கு கூலி ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து எடுத்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக நாட்டு மல்லி ரகம் நல்ல மணமுடன் சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஆனால் மகசூல் குறைவாக கிடைப்பதுடன் வியாபாரிகளோ பொதுமக்களோ அதனை பெரிதும் விரும்பி வாங்குவதில்லை.அதனால் வீரிய ரக மல்லிகளையே சாகுபடி செய்கிறோம்.மல்லி சாகுபடியைப் பொறுத்தவரை மண் பொலபொலப்பாகும் வரை நன்கு உழவு செய்ய வேண்டியது அவசியமாகும்.மேலும் கோழி எருவை அடியுரமாக இடுவது சிறந்த மகசூல் கொடுக்கும்.ஏக்கருக்கு 9 கிலோ அளவுக்கு விதைகள் இருந்தால் போதுமானது.

மேலும் களை எடுப்பு,உரமிடுதல்,நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை முறையாகச் செய்தால் 45 முதல் 55 நாட்களில் மல்லித்தழையை அறுவடை செய்யலாம்.தற்போது இடையில் பெய்த மழை உள்ளிட்ட மாறி வரும் பருவநிலை மாற்றங்களால் பெருமளவு விதைகள் முளைக்கவில்லை.மேலும் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது.இதனால் எதிர்பார்த்த மகசூல் எடுக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு கிலோ மல்லித்தழை ரூ 80 க்கு விற்பனையாவதால் லாபகரமானதாகவே உள்ளது’என்று அவர்கள் கூறினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )