உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு கிருஸ்னகுமார் திரு.எஸ்.எஸ்.சுந்தர் திருமதி பி.டி.ஆஷா திரு.கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் ரிப்பன் வெட்டி 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை திறந்துவைத்தனர்.
பின்பு குத்துவிளக்கு ஏற்றி திருவள்ளுவர் அம்பேத்கர் காந்தியடிகள் ஆகியோரின் படங்களை திறந்துவைத்தனர்.


நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை மாவட்ட கூடுதல் நீதிபதி முரளிதரன், சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 விஜயகுமார்,எண் 2 மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன்,சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜெய ராமகிருஷ்ணன்,அரசு வழக்கறிஞர் சேதுராமன் உடுமலை நகராட்சி சேர்மன் மத்தின் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன் உடுமலை பகுதி வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
