உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்.

உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார் முகாமை கல்லூரி முதல்வர்சோ.கி.கல்யாணி தொடங்கி வைத்தார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பால் வினைப்பிரிவு ஆலோசகர் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ரத்த சேகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இம்முகாமில் மாணவர்களை 54 பேர் ஐம்பத்தி நான்கு யூனிட் இரத்த தானம் செய்தனர் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார் முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கன்னிமுத்து மற்றும் மாணவர்கள் ரோகித் குமார் வசந்தகுமார் மோகன்குமார் சுரேஷ்குமார் தமிழரசன் கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
