உடுமலை அருகே உள்ள அய்யலு மீ னாட்சி நகரில்17.5 பவுன் நகைகள் கொள்ளை
உடுமலை அருகே உள்ள அய்யலு மீ னாட்சி நகரில்17.5 பவுன் நகைகள் கொள்ளை.
உடுமலை அய்யலு மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கவேலு(64). பொதுப் பணித் துறை ஓய்வு பெற்ற அதிகாரி. தனது மனைவியுடன் கோவை சென்று விட்டார்.
பின்னர் மே 17 ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பீரோவில் இருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டது தெரிய வந்தது. மொத்தம் 17.5 பவுன் நகைகள் கொள்ளை போன நிலையில் அதன் மதிப்பு சுமார் ரூ 5 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்