BREAKING NEWS

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே தளி பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

ஆனாலும் ஒரு சில பகுதியில் மிதமான குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர் அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ மகேந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து குடிநீர் தொட்டி கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது இதில் மகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தார்.

மேலும் பணியை விரைந்து முடித்து குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த நிகழ்வின்போது தெற்கு ஒன்றிய செயலாளர் போக நாதன் பேரூர் செயலாளர் ராமலிங்கம் வளவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )