உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம்.
உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம்.


உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்து சாலையில் 81 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்துள்ளன. ஆடுகளின் கழுத்து வயிறு மற்றும் உறுப்புகளை கடித்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து உடுமலை வனத்துறை அலுவலர் சிவக்குமார் கால்நடை டாக்டர்கள் அரவிந்த் பூங்கோதை ராஜலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு குற்றுயிராக உள்ள ஒன்பது ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுகுறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா எஸ்ஐ சம்பத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த ஆடுகளின் மதிப்பு ரூபாய் 2 லட்சம் இருக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
