உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து.
உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து.

உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து. எந்திரங்கள் நாசம்.
உடுமலை அருகே பஞ்சு மில்லில் ல் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

உடுமலை அருகே உள்ள உரல் பட்டியில் யில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நிதி டெக்டைல்ஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது.

பஞ்சு பேர்களில் தீப்பற்றியதால் வேகமாக பரவியது நூல் மில்லில் இருந்த எந்திரங்களும் எரிய துவங்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
