உடுமலை அருகே பாரம்பரிய பவள கொடி கும்மியாட்டத்தை பாதுகாக்க கோரி பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் – ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன்பட்டி ஊராட்சி அய்யம்பாளையம் புதூரில் கற்பக விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க பவளக்கொடி கும்மி ஆட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற,
சக்தி கலை குழுவின் வள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் பாரதியார் பாரதிதாசன் பாடல்கள், திரைப்படம் தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் பாடியவாறு வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி, பவளக்கொடி கும்மி ஆட்டத்தில் அசத்தினர்.
சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடியவள்ளி கும்மி ஆட்டத்தை சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.