உடுமலை அருகே பெதப்பம்பட்டி பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடிய இருவர் கைது.

பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரில் பெண் ஊழியர் உட்பட இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதம்பட்டியில் உள்ள ஹெச்.பி.பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர்களிடம் நைசாக பேச்சுகொடுத்து அருகில் உள்ள கேனில் பெட்ரோலை நிரப்பி ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டனர். இதனை வாகன ஒட்டிகள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
இதனிடையே பங்க் உரிமையாளரான வென்னிலா என்பவர்கொடுத்தபுகாரின் பேரில் வழக்குபதிவு செய்த குடிமங்கலம் காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட சிலம்பரசன் மற்றும் சாந்தி இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர்.