உடுமலை ஏரி பாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.!
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப் பாளையத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
10 ம் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து மங்கல இசை விநாயக வழிபாடு புண்ணியாக வாசனம் பஞ்சகாவியம், காலஸ்தாபனம் கணபதி ஹோமம் கணபூஜை கோபூஜை நவகிரக ஹோமம் பூர்ணாகுதி மகா தீபாரதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து முளைப்பாலிகை அழைத்தலும் முதல் கால வேள்வி யாகம் இரண்டாம் கால வேள்வி மூன்றாம் கால மற்றும் நான்காம் கால வேள்வி நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோபுர கலச கும்பாபிஷேகமும் தொடர்ந்து அருள்மிகு காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.
கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ மாணிக் கவாசக மடாலயம் ச. நடராஜ சுவாமிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார்.
கும்பாபிஷேக விழாவில் ஏரிப்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.