உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம்
![உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம் உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம்](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-12-at-11.38.21-AM-1.jpeg)
உடுமலை: தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி நகராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் இன்று காலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2022 -23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 13ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக தீவிர மாணவர் சேர்க்கை வாகனப்பிரச்சாரம் காலை உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி கூறி இந்த வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த தீவிர மாணவர் சேர்க்கை வாகன பிரச்சாரத்தை உடுமலைப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உடுமலை வட்டார ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.