BREAKING NEWS

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன்,பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி,கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய கடவுள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு பிரதோஷம், கிருத்திகை,மஹாசிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி ,அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு வந்து நாள்தோறும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பிரதோஷத்தை யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.அப்போது சந்தனம்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சல்,இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர்,கரும்புச்சர்க்கரை,சந்தனாதிதைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை அபிசேகம் நடத்தப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டும் விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )