BREAKING NEWS

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையம் அருகில் அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

 

 

இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடுமலைப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

 

 

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .இருப்பினும் கடையில் இருந்த கேமராக்கள், பிரிண்டர் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

 

 

விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மத்திய பஸ் நிலையம் அருகில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS