BREAKING NEWS

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.
கோடை காலத்தில் தண்ணீர் தேடி யானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம் மேலும் சாலையில் நீண்ட நேரம் உலா வரும் யானைகள் தற்போது கோடை முடிந்த நிலையிலும் மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக நடமாடி வருகின்றன. புங்கன் ஓடை எஸ் சென்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக யானைகள் நிற்கின்றன இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்றபின் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி செல்போனில் படம் பிடிப்பது கூச்சலிடுவது போன்ற தொந்தரவு செய்யக்கூடாது சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )