BREAKING NEWS

உடுமலை ரயில் நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

உடுமலை ரயில் நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம்  குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

உடுமலையில் ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது அத்துடன் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும் பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு இடையே இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை கடந்த 2009ஆம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது.

தற்போது இந்த பணிகளால் அப்போது ஐந்து ஆண்டுகளாக உடுமலை வழியாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலை வழியாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை ரயில் நிலையத்தில் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகள் கிடைப்பதில்லை இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலைய வளாகத்தின் அலுவலகத்தின் வெளிப் பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ரயிலில் வரும் பயணிகள் அங்கு சென்று தண்ணீர் குடித்து வர முடியாது அதனால் ரயில் நிலை அலுவலக வெளிப்புறம் உள்ள குடிநீர் குழாயை அலுவலகத்தின் உட்புறம் உள்ள ரயில்வே வளாகம் வரை குடிநீர் குழாய் அமைத்து நீட்டித்து அங்கு தொட்டி வைத்தால் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

இந்த ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படு கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 2018 19 ஆம் நிதியாண்டில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது
அதில் நாலு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து வந்தது ஆனால் இந்த எந்திரம் பழுதாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இது பராமரிப்பில்லாமல் பயனின்றி காட்சி பொருளாகவே உள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன ஒவ்வொரு பிளாட்பாரத்தில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்த குடிநீர் குழாய் களுக்கு ரயில் நிலையத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது இந்த கிணற்றில் உள்ள பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிக்கின்றனர் காலி பாட்டில்களை அந்த கிணற்றில் போட்டு விடுகின்றனர்.
இரவு நேரத்தில் குடித்து த்துவிட்டு குடிநீர் குழாய்களை பிடித்து அசைகின்றனர் இதில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து உள்ளதால் அவை பயன்படுத்த முடியாதபடி உள்ளது அதனால் தண்ணீர் வருவதை தவிர்க்க என்ற இரண்டு குழாய்களையும் கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இரண்டு இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது அந்த இரண்டு குழாய்களில் தண்ணீர் வருவதில்லைஇதனால் உடுமலை ரயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது அதனால் ரயில் பயணிகள் உடுமலை ரயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை ரயில் நிலையத்தில் நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது பார்த்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )