BREAKING NEWS

உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை மு.அருணா துவக்கி வைத்தார்.

உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்…

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை சீசன் காலநிலையை அனுபவிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.

அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மே மாதம் 1ஆம் தேதி முதல் அம்மாதம் இறுதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை கோடை விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவது வழக்கம்.

அவ்வாறு நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் 19வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ளது. அதற்காக பூங்காவில் உள்ள 32,000 ரோஜா செடிகளில், 4, 200 ரகங்களை கொண்ட ரோஜா பூங்காவில் கவாத்து மேற்கொள்ளும் பணிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/t8ZxJIj-3R4

 

CATEGORIES
TAGS