BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றவை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றவை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

இன்று தமிழக அமைச்சரவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக் கொண்டதை திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

 

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பத்தில் சிக்னல் பகுதியில் கம்பம் நகர திராவிட முன்னேற்ற கழக தெற்கு நகர செயலாளர் சூர்யா செல்வகுமார், வடக்கு நகர செயலாளர் வீரபாண்டி ஆகியோர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பட்டாசு வெடித்தும் சாலையில் வாகனத்தில் செல்லும் பொது மக்களுக்கு மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

 

 

மேலும் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, பேரூர், நகர, கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )