உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை கண்டுகளித்த ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கு இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தென்காசியில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர் அவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பிலும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பிலும் இருசக்கர வாகனம் (பல்சர் பைக்) இன்று வழங்கப்பட்டது. அப்போது தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தேர்தல் பொறுப்பாளர் PTC செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், துணைசெயலாளர் சிவ அருணன், செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, பொருளாளர் திராவிடமணி, கண்ணன் தகவல் தொழில்நுட்ப அணி சங்கரசுப்பு உட்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES Uncategorized
