BREAKING NEWS

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கீர்த்தி(21) என்ற இளைஞரை கடந்த 24 ஆம் தேதி காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது நெருங்கிய நண்பர்கள் நான்கு பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்குள் ஏற்பட்ட மது அருந்தும் தகராறில் இளைஞரை கொலை செய்து அவரது உடலில் கல்லை கட்டி மாதா கோவில் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் வீசியதாக தகவல் தெரிய வந்துள்ளது.

 

 

அதனைத் தொடர்ந்து அந்த கிணறு பகுதிக்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அழுகிய நிலையில் உடலை கைப்பற்றி மோப்ப நாய் வரவழைத்து தீவிர விசாரணை செய்து பிரேதத்தை பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

 

CATEGORIES
TAGS