BREAKING NEWS

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’- தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உருக்கமான கடிதம்.

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என்றும் தொண்டர்களுக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக கூறியுள்ளார்.

 

அதிமுக தொடங்கப்பட்டு 51-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

 

அதில், “51-வது தொடக்க விழா முன்னிட்டு மாவட்ட செயலாளர் முதல் கிளைக் கழக செயலாளர் வரை அனைத்து தொண்டர்களுக்கும் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவால் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என செய்த துரோகத்தால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தோம்.

 

தேர்தலில் தோற்றமே தவிர கொண்ட கொள்கையிலும் கோட்பாடுகளிலும், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் எண்ணங்களை ஈடேற்ற வேண்டும் என்ற பயணத்தில் தோற்கவில்லை.

 

தங்களுடைய எண்ணம் ஈடறவில்லை, தங்களுக்கும் தங்கள் வாரிசுக்கும் பதவி கிடைக்கவில்லை என இடம் மாறிய தலைவர்கள் உண்டே தவிர, ஒரு தொண்டர் கூட அதிமுகவை விட்டு விலகவில்லை.

 

உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )