BREAKING NEWS

உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா – விவசாயிகள் எதிர்பார்ப்பு.

உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா – விவசாயிகள் எதிர்பார்ப்பு.

பூதலூர்: காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாக விளங்குவது கல்லணை. கல்லணையின் முதல் மடை பகுதியாக உள்ளது பூதலூர் ஒன்றிய பகுதி.

பூதலூர் ஒன்றிய பகுதியிலும் காவிரி கரையோரம் உள்ள கிராமப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு பாசன மூலம் நெல, கரும்பு, வாழை, காய்கறி என அனைத்து பயிர்களும் வருடத்தின் அனைத்து சமயங்களிலும் பயிரிடப்பட்டு வளமையான பூமியாக திகழ்கிறது. வெண்ணாறு மற்றும் அதன் கிளை கால்வாயான ஆனந்த காவிரி பாசனப்பகுதியில் முற்றிலும் கால்வாய் பாசன தண்ணீரை மட்டுமே நம்பி பயிரிடப்பட்டு வரும் பகுதியாக திகழ்கிறது. இந்த பகுதியில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.

 

மற்றொரு பகுதியான செங்கிப்பட்டி பகுதி முழுமையும் வறட்சி நிலவும் பகுதியாக இன்றளவும் உள்ளது. செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளை புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உயக் கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் நிரப்பி அதன் பின்னர் பருவ மழையால் பெய்யும் மழையால்பெறும் தண்ணீரைக் கொண்டு ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெறும் பகுதியாக செங்கிப்பட்டி பகுதி விளங்கி வருகிறது. செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் நவலூர், ராயமுண்டான்பட்டி, சுரக்குடி பட்டி, வெண்டயம்பட்டி, கோட்டரப்பட்டி மற்றும் இதனோடுஅருகில் உள்ள கிராமங்களில் 16க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 4 200 ஏக்கர் ஒருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

 

கடந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்ட போது உய்யக்ககொண்டான் நீட்டிப்பு கால்வாயில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு பூதலூர் ஒன்றிய பகுதி ஏரிகளை நிரப்பி ஒருபோக சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரி பாசன பகுதிகளில் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டுள்ளன.

 

ஆனால் உய்யக் கொண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமான முறையில் எந்த அறிவிப்பும் திருச்சி ஆற்றுப் பாசன கோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாயின் தலைப்பு பகுதியாக உள்ள திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை ஏரியிலும் தண்ணீர் முழு அளவில் இல்லாத நிலையில், பூதலூர் ஒன்றிய பகுதிகளுக்கு உய்யக்கொ–ண்டான்நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

 

இதனால் பாசன பகுதி விவசாயிகள் ஒருபோக சாகுபடி காலத்தில் நடைபெற இயலுமா? என்று கவலையில் உள்ளனர். உடனடியாக பொது ப்பணி த்துறை ஆற்றுப் பாசன கோட்டஅதிகாரிகள் முனைந்து செயல்பட்டு வாழவந்தான் கோட்டை ஏரியை நிரப்பி அதிலிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள நீட்டிப்பு கால்வாய் பாசன ஏரிகளை நிரப்பி ஒருபோக நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )