BREAKING NEWS

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடலில் பார்வையாளர் அமரும் காலரி, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி உள்ளிட்ட ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

 

 

தொடர்ந்து வாடிவாசல் வர்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானம் ஜே.சி.பி.மூலம் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணை சேர்மன் ராமராஜ், மற்றும் வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர் தேவி, உதவி செயற்பொறியாளர் சுரேஷ் குமார், இளநிலை பொறியாளர் கருப்பையா,

 

கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்பி சிவபிரசாத்,

 

 

டிஎஸ்பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்யப்படும் இடம், காளைகள் வரிசைப்படுத்தும் பகுதி, மாடுபிடி வீரர்கள் அமரும் பகுதி, உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இம்முறை கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS