BREAKING NEWS

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உலகம் முழுவதும் ரத்த கொடையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று பலர் ரத்தத்தை தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன்ஷிப் கம்யூனிட்டி சென்டரில் லைப் சோன் ஆப் திருச்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் திருச்சி கீ .ஆ .பே விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமை பெல் நிறுவன பொது மேலாளர் கமலக்கண்ணன் துவங்கி வைத்தார். பின்னர் ரத்தத்தை தானமாக வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த ரத்ததான முகாமில் பெல் நிறுவன ஊழியர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு ரத்தத்தை தானமாக வழங்கினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )