BREAKING NEWS

உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமையான அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமையான அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

 

உலக கண்ணொளி தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

 

 

இதனையடுத்து, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மண்டல கண் சிகிச்சை மையத்தில் கண்களை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில் மருத்துவகல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது தமிழகத்தில் கண்புரை அறுவை சிகிச்சையில் தஞ்சை மருத்துவமனை முதல் இடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

 

 

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியையும் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மருதுதுரை ஞானசெல்வன் உஷாதேவி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )