ஊட்டத்தூரில் மோட்டார் பைக் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை.

செய்தியாளர் சூ.வினோத்குமார்
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக் திடீர் மாயம். கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.
ஊட்டத்தூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் 31 வயதான ரகுபதி.இவர் தனது டி.வி.எஸ். அப்பாச்சி மோட்டார் பைக்கை கடந்த 14ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் 15ஆம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். இந்த மோட்டார் பைக்கின் மதிப்பு ரூ 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
மயமான மோட்டார் பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ரகுபதி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
