ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராதாநகர் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பது குறித்தும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி கொப்ளான் ஏரியின் சீரமைப்பு பணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக்
தண்டபாணி. திருப்போரூர் ஒன்றியகுழு பெருந்தலைவர் எல். இதயவர்மன் ஆகியோர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில் புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில் முறையாக மழைநீர் வடிகிறதா என ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் வரும் காலங்களில் இப்பகுதியில் கொஞ்சம் கூட மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் இனி நீங்களும் ஆக்ரமிப்புகளில் வீடுகட்டுவதை தவிர்த்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களிடம் கூறினார்.தாம்பரம் வருவாய் கோடாட்சியர் செல்வகுமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.