எடப்பாடியில் உலாவும் முகமூடி கொள்ளையர்கள்..!!! அச்சத்தில் பொதுமக்கள்..

எடப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் திருட்டு சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ரோடு முருகன் நகரில் இரவு இரண்டு மணி அளவில் பூட்டி இருந்த வீட்டின் கதவைத் திறந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த சுந்திரம் மனைவி சரோஜா கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலிக்கொடியை முகமூடி, அணிந்தபடி இரண்டு மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து கூச்சலிட்டபடி தடுக்க முயன்ற சரோஜாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து சரோஜாவின் கையை கற்களால் சரமாரியாக அடித்து கையை உடைத்துவிட்டு தப்பி ஓட்டிவிட்டனர்.

மேலும் சரோஜா அலரும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்க்கும் பொழுது ரத்த வெள்ளத்தில் சரோஜா இருந்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தகவலின் அடிப்படையில் போலீசார் திருட்டு நடந்த விட்டிற்கு அருகில் இருந்த சிசிடி காட்சிகளை வைத்து எடப்பாடி முலுவதும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சரோஜா எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எடப்பாடியில் அடுத்தடுத்து ஏற்படும் திருட்டால் அப்பகுதி மக்கள் மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
