எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இ.பி.எஸ் ஆதரவு தேனி மாவட்ட அதிமுக ஒன்றிய, பேரூர், நகர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
தேனி மாவட்ட செய்தியாளர் முத்துராஜ்.
(ஒளிப்பதிவாளர்) சதிஸன் தேனி.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிஎடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவுகம்பம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்