எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
தேனி மாவட்டம் கம்பம் முல்லை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பாக கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளி அலுவலக கட்டிடம் தரைத்தளம் மாற்ற கூறியதும்.
நிலுவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உடனே வழங்க கோரியும்.
மாற்றுத்திறனாளிகளின் அலுவலரை மாற்ற கோரியும்
நிலுவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை வழங்கக்கோரி.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி போன்ற தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்த வேண்டும் ஆனால் இதற்கான கூட்டம் முறையாக நடத்துவது இல்லை. அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளை முறையாக நடத்துவதில்லை அதைக் கண்டித்தும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா அவரின் தலைமை தாங்கினார், தலைவர் புகாரி மஸ்தான், துணைத் தலைவர் சிவராஜ் குமார் மற்றும் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வைக்க. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.