என் குப்பை என் பொறுப்பு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி.

சீர்காழி: சீர்காழிசியாமளா பெண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெ ற்றது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். நகராட்சிசுகா தார அலுவலர் செந்தில்ராம்குமார் ஓவிய ப்போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி பெற்ற மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியைகள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.