எல்.ஐ.சி.யின் பங்குகள் அதிரடி சரிவு!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவை ஈடுகட்டும் வகையில் எல்.ஐ.சி யின் பங்குகளை விற்று லாபம் ஈட்ட திட்டமிட்ட மத்திய அரசு, அதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும் ஒரு பங்குக்கு ரூ. 949-க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை கடந்த மே 6-ம் தொடங்கியது.
இந்த நிலையில் அந்நிறுவனத்தின் மொத்த பொது பங்குகளையும் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அரசுக்கு ரூ. 20,557 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.
இதையடுத்து இந்த பங்குகள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, மே 17-ம் தேதி விற்பனை தொடங்கியது. இதில் பங்குகள் அனைத்தும் வாங்கிய விலையிலிருந்து 8.11 சதவீதமாக குறைவாகவே ரூ. 872-க்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் எல்ஐசியின் பங்குகள் விலை குறைந்துகொண்டே வந்தது.